• IMG3719
 • IMG3729
 • IMG3731
 • IMG3765
 • IMG3783
 • IMG3784
 • IMG3821
 • IMG3836
 • IMG3873
 • IMG3924
 • IMG3932

கிளிநொச்சியில் 10 பேருக்கு சுவிஸ் லுட்சன் துர்க்கையம்மன் கோயில் பரிபாலனசபை துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

cyckle kilinochchi 001 சிறு சிறு உதவிகளால் எம்மில் மாற்றங்களை ஏற்படுத்தி நம்பிக்கையை கட்டி வளர்த்து எமக்கான ஒரு சுதந்திரமான வாழ்வுக்காக நாம் உழைக்க வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபை உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில், சுவிஸ் நாட்டு லுட்சன் துர்க்கையம்மன் கோயில் பரிபாலன சபையின் ஏற்பாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் பயனாளிகள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது இளைஞர் யுவதிகளின் மனித மணித்தியாலங்களை பல்வேறு வழிகளில் இலங்கை அரசு சிதைத்து வருகின்றது என்றும் நியாயமான தொழில் நடைமுறைகளோ தொழில் ஒப்பந்தமோ, வேலை வரன்முறைகளையோ அற்று குறுங்கால வேலைக்காக சம்பளங்களை வழங்கியும் பிற்போடப்பட்ட கடன் கொடுப்பனவு முறையில் வாகனங்களை அளித்தும் சொற்ப ஆசைகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு அழிவுச் செயற்பாட்டுக்கு அரசு இட்டுச் சென்று வருகிறது.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென அரசு சிந்தித்தால் ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனக் கூட்டத்தாபனம், வட்டக்கச்சி பண்ணை என பல்வேறுபட்ட இயக்கமற்ற நிலையில் காணப்படும் கூட்டுத்தாபனங்களை இயக்கி தொழில் வாய்ப்புக்களை வழங்கலாம் என்றும் கூறினார்.

கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன் தலைமையில் இடம் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி, கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி செயலாளரும் ஓய்வுநிலை கிராம அலுவலரான சு.பசுபதிப்பிள்ளை, அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கு.சர்வானந்தன், பயனாளிகள், மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

cyckle kilinochchi 001
 cyckle kilinochchi 002
 cyckle kilinochchi 003
 cyckle kilinochchi 006
 

 

 • நிறைகுடம் வைப்பது எப்படி?

   

  நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.

  விபரம்

 • பூசை அறையை எப்படி வைப்பது?

  சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.

  விபரம்

 • தகவல்

  தகவல்

  விபரம்

 
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்
Amman Hindu Temple Luzern
Tamilische Hindu Kultur- Gemeinschaft Luzern
 
Bahnhof str.19A
Postfach 216
6032 Root
041 450 02 84
076 441 44 65
076 338 38 70