• IMG3719
  • IMG3729
  • IMG3731
  • IMG3765
  • IMG3783
  • IMG3784
  • IMG3821
  • IMG3836
  • IMG3873
  • IMG3924
  • IMG3932

துர்முகி வருடப்பிறப்புச் சுப கருமங்கள் (சுவிஸ்)

அம்பிகை அடியார்களே! 
துர்முகி வருடம் சித்திரை மதம் 01ஆம் நாள் (13-04-2016) புதன்கிழமை பிற்பகல் 04.16 மணியளவில் பூர்பவபட்ஷ ஸப்தமி திதியில்,புனர்பூச நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சிங்க லக்கினத்தில் ” துர்முகி ” வருடம் பிறக்கிறது.

எதிர்வரும் 13.04.2016 வெள்ளி  09:00-21:00 வரை கோவில் திறந்திருக்கும்.

அன்று பிற்பகல் 12.18 மணிமுதல் முன்னிரவு 08.18 மணி வரை விஷேச புண்ணிய காலமாகும்.
இப்புண்ணிய காலத்தில் யாவரும் சங்கற்பித்து “மருத்துநீர் ” தேய்த்து கடம்பமிலையையும், காலில் வேப்பமிலையையும் வைத்து ஸ்நானம் செய்து நல்ல பச்சை, வெள்ளை நிறமுள்ள அல்லது கரையுள்ள பட்டாடைகளை அணிந்து, மகரதம், வைரம் இழைத்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி நறுமலர் சூடி விக்னேஸ்வரர் முதலிய குலதெய்வ வழிபாடு செய்து இயன்ற தான தருமங்களை ஆற்றி குரு, பெற்றோர் , பெரியவர்களை வணங்கி ஆசி பெற்று பந்து மித்திரர்களுடன் அளவளாவி அறுசுவை உண்டிகளுடன் மோதகம், மாதுளம்பழம் என்பவற்றைச் சேர்த்தருந்தி தாம்பூலம் தரித்து கண்ணாடி, தீபம், நிறைகுடம் முதலிய மங்களப் பொருட்களை தரிசித்து மகிழ்ந்து வாழ்வோமாக.
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் :-
மிருகசீரிடம் 3ம், 4ம் கால்கள் திருவாதிரை, புனர்பூசம் 1ம்,2ம்,3ம் கால்கள், சுவாதி, விசாகம் 4ம் கால்கள், அனுஷம், கேட்டை, சதையம் இவற்றில் பிறந்தவர்கள் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களை செய்து சங்கிரமதோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
துர்முகி வருட ஆதாயவியயம் :-
கடகம், சிங்கத்தில் பிறந்தோர் அதிக லாபத்தையும், மிதுனம், கன்னியில் பிறந்தோர் சுகத்தையும் , மகரம் பிறந்தோர் சம சுகத்தையும் , மேடம், இடபம், துலாம்,
விருச்சிகம், தனு, மீனம், ரசியில் பிறந்தவர்கள் நஷ்டத்தையும் அடைவர்.

கைவிஷேசம்
சித்திரை 01 திகதி (13-04-2015) புதன்கிழமை மாலை 04.24 தொடக்கம் 05.10 மணிவரை

சுவிட்சர்லாந்து திருக்கணித பஞ்சாங்கம்


மாலை 06:00 மணிக்கு அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூசை துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை நடைபெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.


மலரும் புத்தாண்டில் எமது தாயகத்தில் எம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு கிடைக்க அம்பாள் துர்க்கையின் அருளை வேண்டி நிற்போமாக.
நன்றி
  • இராகு, கேது பெயர்ச்சி பலன்கள் - 2016 / 2017

    துர்முகி புத்தாண்டு பலன்கள் 2016 – கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் !!

    விபரம்

  • நிறைகுடம் வைப்பது எப்படி?

     

    நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.

    விபரம்

  • பூசை அறையை எப்படி வைப்பது?

    சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.

    விபரம்

  • தகவல்

    தகவல்

    விபரம்

 
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்
Amman Hindu Temple Luzern
Tamilische Hindu Kultur- Gemeinschaft Luzern
 
Bahnhof str.19A
Postfach 216
6032 Root
041 450 02 84
076 441 44 65
076 338 38 70